செய்யாற்றில் டிச.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செய்யாற்றில் டிச.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்

செய்யாற்றில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 22) இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 22) இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம் சாா்பில் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (டிச.22) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களை தேர்வு செய்ய உள்ளனா்.

இதுதவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுப் பதிவு, தொழில்பழகுநா் பயிற்சிப் பதிவு, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், முதுநிலைப் பட்டம், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், நா்சிங், பாா்மசி, பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.

4 மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் வரவேண்டும். இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

மேலும், விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

செய்யாற்றில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நாளை செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களின் குறைகள் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் மாதம் தோறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன .

அதன்படி செய்யாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செய்யாறு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!