தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து 23 பேர் படுகாயம்
விபத்துக்குள்ளான தனியார் நிறுவன பேருந்து
செய்யாறு அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து 23 தொழிலாளர்கள் காயமடைந்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பெண் தொழிலாளா்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனா்.
காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள இராந்தம், அசனமாபேட்டை, பெருங்கட்டூா், கொடையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து தொழிலாளா்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு நிறுவனத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது . பேருந்தில் 40 தொழிலாளா்கள் இருந்தனா்.
காஞ்சிபுரம்-ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கொடையம்பாக்கம் கிராமம் அருகே சாலையின் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர வயல்வெளி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 23 பேர் காயம் அடைந்து கூச்சல் எழுப்பினர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் காயம் அடைந்த தொழிலாளர்கள் ஏற்றப்பட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் லேசான காயமடைந்த 18 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த ஆயிரம்மங்கலம், பெருங்கட்டூர், கொடையம்பாக்கம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 5 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து மோரணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu