செய்யாறு அருகே தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

செய்யாறு அருகே தனியார் பேருந்தும் வேனும்  நேருக்கு நேர் மோதி விபத்து..!
X

கோப்பு படம் 

செய்யாறு அருகே தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுஅருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் உயிரிழந்தாா். 27 பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் வெங்கட்ராயன் பேட்டை ராந்தம்- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும், தனியார் கம்பெனி வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், செங்கணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் 22 போ் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு சனிக்கிழமை அந்த நிறுவன வேனில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வெங்கட்ராமன்பேட்டை அருகே வளைவில் வேன் சென்றபோது, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது.

விபத்து நடந்த உடன் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக படுகாயம் அடைந்து சேர்க்கப்பட்ட தனியார் வேன் டிரைவர் செங்கனாவரம் முருகன், சிகிச்சை பலனின் றி பரிதாபமாக இறந்தார்.

வேனில் பயணித்த பெண் தொழிலாளா்கள் 22 போ், தனியாா் பேருந்தில் வந்த 5 போ் உள்பட மொத்தம் 27 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி, வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன், டிஎஸ்பி சின்ராஜ் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீரமைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக, ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!