/* */

திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

HIGHLIGHTS

திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை
X

திருவண்ணாமலை மாவட்ட சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன் தூசி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் தலைமையில் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது குறித்தும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி குவாரிகளை நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.

மேலும் தூசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள் ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குவாரி வாகனங்கள் காலை 08 மணி முதல் 09 மணி வரையிலும் மாலை 04.30 மணி முதல் 06 மணி வரையிலும் செல்லக் கூடாது என்றும் , லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்றும் தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும் என்றும் மாமுல் கொடுக்க வேண்டும் என்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கல்குவாரியினர் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் தூசி காவல் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் உடனிருந்தார்.

Updated On: 14 March 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!