சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்த கல்லூரி மாணவர் கைது

சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்த கல்லூரி மாணவர் கைது
X
செய்யாறு அருகே சிறுவனை வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்யாறு அருகே சிறுவனை வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் 11 வயது சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் விளையாடிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த சமயத்தில் ஏரிக்கரையில் சிறுநல்லூரை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பிரவீன் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற சிறுவனை கட்டாயப்படுத்தி அடித்து தாங்கள் அருந்திக் கொண்டிருந்த மதுவினை குடிக்க செய்துள்ளனர்.

சிறிது நேரத்தில் சிறுவன் சுய நினைவு இன்றி ஏரிக்கரையில் மயங்கி விழுந்து உள்ளான். இதனால் பயந்து மது அருந்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அப்பொது அந்த வழியாக வந்த ஒருவர் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் சிலர் வலுக்கட்டாயமாக மது கொடுத்தது தெரிய வந்தது.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தூசி காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பாபு புகாரை பதிவு செய்து பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கைதான பிரவீன் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்மேலும் இதில் தொடர்புடைய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர் . .

நான்கு வயது சிறுவனுடன் மது கூடத்தில் மது அருந்தும் இளைஞர்களின் வீடியோ வைரலாகி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!