அரசுப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்

அரசுப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்
X

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர்‌ நளினி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்‌.

செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடம் முதல்கட்ட கலந்தாய்வில் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு சீட்டு கிடைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழும தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின்‌ போது, மருத்துவப்‌ படிப்புக்குத்‌ தேர்வான மாணவிகளான பி.கவிபிரியா, எஸ்‌.சுவாதி மற்றும்‌ பல்‌ மருத்துவம்‌ பயில சீட்‌ கிடைத்த மாணவிகளான ஏ.கோட்டீஸ்வரி, எம்‌.ஆர்த்தி, எஸ்‌.யாமினி, கே.ஹரினி ஆகியோருக்கு சிறப்பு விருந்தினராகப்‌ பங்கேற்ற செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர்‌ நளினி இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்‌.

செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த தகவல் அறிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் செய்யாறு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil