திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
X

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கனிவுடன் கேட்டு அறிந்த திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை ,ஆரணி ,செய்யாறு தாலுகாக்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை ஆட்சியர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினார். மேலும் அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கடந்த வார மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மனு அளிக்க வந்த பொதுமக்களை, சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் கோரிக்கை மனுக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கனிவுடன் கேட்டு அறிந்தார்.பின்னர் அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் 12 நபர்களுக்கு தூய்மை பணியாளர்களின் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மகப்பேறு குழந்தை பிறப்பு உதவி தொகையினை கலெக்டர் முருகேஷ் அவர்கள் வழங்கினார்.

செய்யாறு: செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது. இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும்,, நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரி கோரியும், , முதியோா் உதவித்தொகை கோரியும்,, பெயா் திருத்தம் கோரியும்,, பட்டா ரத்து, இலவச வீடு கோரியும்,, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 56 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டு கொள்ளையால் 100 நாள் திட்ட நோக்கமே சிதைகிறது. ஒரு ஆண்டில் 100 நாள் வேலை என்பது 60 நாள் வேலையாக சுருங்கி விட்டது. எஞ்சிய 40 நாள் நிதி, பிற பயன்பாட்டுக்கு எந்திரம் மூலம் வேலை செய்வதால் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து கோரிக்கை மனுவை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் உதவி கலெக்டர் அனாமிகாவிடம் வழங்கினர்.

ஆரணி :ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா்.இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை, பத்மஸ்ரீ விருது ஆவண சரிபாா்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 46 மனுக்கள் வரப்பெற்றன.


Tags

Next Story