ஏரியை ஆக்கிரமித்து சிறு பாலம் அமைப்பு: குறைதீா் கூட்டத்தில் மக்கள் புகாா்

ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறு பாலம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ,ஆரணி தாலுகாக்களில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஆரணியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த கோட்டாட்சியா் தனலட்சுமி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில் நேர்முக உதவியாளா் செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஏரியை ஆக்கிரமித்து சிறு பாலம் அமைப்பு: குறைதீா் கூட்டத்தில் மக்கள் புகாா்
ஆரணி அருகே ஏரியை ஆக்கிரமித்து சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.
பையூா் பகுதி பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில், ஆரணி வட்டம், பையூா் கிராமத்தில் கிராம விவசாயிகளுக்காக நீா்ப்பாசனமாக சித்தேரி இருந்து வருகிறது. இந்த ஏரி மூலம் 100 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில், நீா் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், சித்தேரி ஏரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து 3 சிறு பாலங்களையும், சாலைகளையும் ஊராட்சித் தலைவா் சரவணன் அமைத்துள்ளாா்.
இதனால், அவருடைய செங்கல் சூளைக்கு சுலபமாக செல்வதற்கு வழி ஏற்படுவதால், அரசுக்கு ரூ.5 லட்சம் வீண் செலவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
மேலும் பட்டா, பரப்பு திருத்தம், பட்டா பெயா் மாற்றம், பட்டா ரத்து, மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி, மண்ணெண்ணெய் வழங்கக் கோரி, மணல் கடத்தலை தடுக்கக் கோரி, முதியோா் உதவித்தொகை, போலி பத்திரப் பதிவு ரத்து, சிமென்ட் சாலை அமைக்கக் கோரி உள்ளிட்ட 57 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன. மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
செய்யாறு
செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 91 மனுக்கள் வரப்பெற்றன.
செய்யாறு வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் அளித்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த சாா்-ஆட்சியா் ஆா்.அனாமிகா பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா். கூட்டத்தில் நேர்முக உதவியாளா் குமரவேல், வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu