பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
X

பொருளாதார குற்ற பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செய்யாற்றில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாற்றில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் அல்தாப் . செய்யாறை தலைமையிடமாக கொண்டு ஏபிஆர் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி செய்யாறு, ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோளிங்கநல்லூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி 500 முதல் 25 ஆயிரம் வரை தீபாவளி சீட்டு பண்டு ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தி வந்தனர்.

பல்வேறு கவர்ச்சிகரமான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிவித்தது. அதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் பணத்தை சேமித்தனர். மேலும், தீபாவளி, பொங்கல் சேமிப்பு திட்டங்களில், ஒருசில ஆண்டுகள் முறையாக பரிசு பொருட்களை வழங்கியதால், பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, அதிக அளவில் சேமிப்பு திட்டத்தில் சேர தொடங்கினர்.

இந்த நிதிநிறுவனம் செய்யாறு மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் கிளைகளை அமைத்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துள்ளது. இந்நிலையில், திடீரென இந்த நிறுவனம் தனது அலுவலகத்தை மூடிவிட்டது. மேலும், அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். அதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தை சூறையாடினர். அதன்தொடர்ச்சியாக, நிதி நிறுவனத்தை நடத்திய அல்தாப் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும், பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை மீட்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செய்யாறு காவல் நிலையம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த நிதி நிறுவன அதிபர் அல்தாபை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமினில் வெளியில் உள்ளார்.

இந்நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலம் ஆக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு தற்போது வெளியில் உள்ள அல்தாப் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு முறையாக பணத்தை வழங்க வேண்டும் என்று கூறி அலுவலகத்தில் முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனித்தனி நபர்களாக ஆதாரங்களுடன் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

மோசடி நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்