சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு அபராதம்: நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
செய்யாறு நகர மன்ற கூட்டம்
செய்யாறில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு ரூ,5000 அபராதம் விதிக்கப்படும் என நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்யாறு நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூடடத்தில் செய்யாறில் போக்குவரத்துக்கு இடைஞ்சூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூட்டத்தில நடைபெற்ற விவாதங்கள் வருமாறு :
விஸ்வநாதன் : பங்களா தெருவில் மகளிர் பள்ளி வளாகத்தின் வெளியே சாலையோரங்களில் கடைகளை அகற்றவேண்டும்.
சரஸ்வதி : 1 வது வார்டில் அறிவுசார் மையம் நூலகம் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால அந்த வார்டு உறுப்பினரான எனக்கு தெரியப்படுத்தவில்லை. 1 வது வார்டில் தெருக்களில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் மேற்கொள்வது பற்றி எந்த தகவலும் சொல்வதில்லை.
பத்மபிரியா: 20 வது வார்டில் சீரான குடிநீர் விநியோகிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சீராக சுத்தம் செய்யவில்லை வார்டில் இரு க் கு ம் போர்வெல்களை சீர்செய்து தடையில்லாத தண்ணீர் வழங்க வேண்டும்.
ரமேஷ்: நகரில் உள்ள அனைத்து கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதா என்று தெரியாமல் பழுது பார்ப்பது அவசியம்தானா? மக்கள் வரிப்பணம் என்பதை உணர்ந்து தேவையை அறிந்தும் பணிகளை மேற்கொள்ளுங்கள். நகராட்சியின் மூலம் விநியோகிக்கும் குடிநீரில் தரமானதாக இல்லை. இதனால் பலரும் கேன் வாட்டர் வாங்கிதான் பயன்படுத்தி வருகிறார்கள்.
சௌந்தர பாண்டியன் : நகராட்சியில் மூன்று ஆண்டுகளாக வரவு செலவு பட்ஜெட் நகர மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எனக்கு இதில் முறைகேடு இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது. ரீ ஆடிட்டிங் செய்ய வேண்டும்.
இதற்கு பதில் அளித்த ஆணையாளர் சரவணன், முதலில் வரவு செலவு கணக்கு மற்றும் ஆடிட்டிங் ரிப்போர்ட் அறிக்கையை ஆகியவற்றை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் அடுத்த நடவடிக்கையை பற்றி பேசுங்கள்.
நகர மன்ற தலைவர் மோகனவேல்: சாட்டிலைட் மூலமாக அரசின் ஏஜென்சிகள் பல திட்ட பணிகளை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ளுகின்றனர். பொது நிதி அதிகரித்து பின்னர் 27 வார்டுகளிலும் கல்வெட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமில்லாமல் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தகவல் தெரிவித்தால், நகராட்சி டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்து தரப்படும். சில இடங்களில் திடீரென பைப் லைன் உடைப்பினால் குடிநீர் விநியோகித்தில் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசித்து வருவதாகவும், குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவு ம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் காணொளி காட்சி மூல் திறந்த அறிவு சார்மையத்தில், நன்கொடையாளரின் உதவியுடன் அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வசதி உள்ள வார்டுகள் வேண்டுமானால் கேன் வாட்டர் வாங்கி இருக்கலாம், ஆனால் 27 வார்டுகளில் பலரும் நகராட்சி குடிநீரை நம்பித்தான் இருக்கிறார்கள். இவ்வாறு நகர மன்ற தலைவர் பதில் அளித்தார்.
இவ்வாறு கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை சலசலப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது.
நகர மன்ற கூட்டத்தில் 4.44 கோடியில் கட்டப்பட்டு முதல்வரால் திறந்த வைக்கப்பட்ட மார்க்கெட் வணிக வளாக கடைகளுக்கு பொது ஏலம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2.15 கோடியில் 5 இடங்களில் தார் சாலை அமைத்தல், மத்திய நிதி குழு ஆணையம் மானியத்தில் நிதி 1.45 கோடியில் 8 இடங்களில் தார் சாலை அமைத்தல், 73 லட்சத்தில் தெப்பக்குளத்தை அம்ருத் திட்டத்தில் புதுப்பித்தல், 4.57 கோடியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நகராட்சி பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காக , பைபாஸ் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது, சாலைகளில போக் குவரத்தி ற் கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தல் என மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி பொறுப்பாளர் சுசில் தாமஸ், சுகாதார ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu