செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா பொறுப்பேற்பு

செய்யாறு சார் ஆட்சியராக  பல்லவி வர்மா பொறுப்பேற்பு
X

செய்யாறு சார் ஆட்சியராக பொறுப்பேற்ற பல்லவி வர்மா 

செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா பொறுப்பேற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா பொறுப்பேற்றார்.

புதுடெல்லியில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்த பல்லவி வர்மா, தமிழகத்துக்கு மாறுதல் பெற்று செய்யாறு சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு ஏற்கனவே சார் ஆட்சியராக பணியாற்றிய அனாமிகா பதவி உயர்வு மூலம் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட சார் ஆட்சியர் பல்லவி வர்மாவை, நேர்முக உதவியாளர் குமாரவேல், கண்காணிப்பாளர் பிரபு, வட்டாட்சியர் முரளி, சிப்காட் வட்டாட்சியர்கள், மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், அரசு துறை அலுவலர்கள் , சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வேளாண் முன்னேற்ற குழுவுக்கு பருவ பயிற்சி

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் செய்யாறு வட்டம் ஜெகநாதபுரம், பூங்குணம், மரக்குணம், அரசம்பட்டு மற்றும் நம்பேடு கிராமங்களில் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சிக்கு, தலைமை வகித்த பெரணமல்லூா் வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளரும், வேளாண் உதவி இயக்குநருமான கோவிந்தராஜன் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் விவசாய திட்டங்கள் குறித்தும், நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் பேசினாா்.

வட்டார வேளாண் அலுவலா் மதன்குமாா் சிறுதானியத்தின் சிறப்புகள் குறித்தும், நெல், மணிலா, உளுந்து பயிரில் பூச்சி, நோய் கட்டுப்பாடு குறித்தும் விளக்கினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வ வெங்கடேஷ் அட்மா திட்ட செயல்பாடு குறித்தும், மண்வள மேம்பாடு, விதை நோத்தி விதை கடினப்படுத்துதல் உயிா் உரங்கள் பயன்பாடு குறித்து விளக்கினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் வினோத்குமாா் உழவன் செயலி குறித்து பேசினாா்.

பயிற்சியில், உதவி வேளாண் அலுவலா்கள் பாபு, மாசிலாமணி, ராமு, ராஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai solutions for small business