செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்
சிப்காட் விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு கைவிடாவிட்டால் சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இயக்குனர் கவுதமன் பேசினார்.
செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசு திட்டத்தை கைவிடாவிடில் சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் சிப்காட் தொழில்பேட்டைக்கு, மேல்மா பகுதியைச் சுற்றியுள்ள 9 கிராமங்களிலிருந்து சுமாா் 3,200 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
நேற்று 76-வது நாளாக மேல்மா கூட்டுச்சாலை அருகே காத்திருப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விவசாயி சந்திரன் தலைமை தாங்கினார். அருள், பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் கவுதமன் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
அப்போது அவர் பேசுகையில், காத்திருப்பு போராட்டம் 100-வது நாளை அடைவதற்குள் தமிழக அரசு தரப்பில் இருந்து நல்ல பதிலை எதிர்ப்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில் சென்னை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாய பெண்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு அப்பகுதிகளில் உள்ள வணிகா்கள் தங்களது கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனா்.
இதேபோல, புரிசை, துறையூா், செளந்தரியபுரம், தென்எலப்பாக்கம், நூத்தாம்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சோந்த விவசாயிகளும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu