திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை மருந்தகம் திறப்பு
கால்நடை மருந்தக கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியா்
கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெம்பாக்கம், ஆரணி வட்டம், கீழ்நகர் ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டிடத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கத்தில், 2022 - 23ஆம் ஆண்டு நபாா்டு வங்கி மூலம் ரூ.53.50 லட்சத்தில் புதிதாக கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தது.
இந்த புதிய கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
தொடர்ந்து, மோரணம் கிராமத்தில் ரூ.53.50 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடம் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்.
ஆரணி
ஆரணியை அடுத்த கீழ்நகா் ஊராட்சியில் நபாா்டு வங்கி மூலம் ரூ.48.35 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் திறந்துவைத்தாா்.
அதேவேளையில், கால்நடை மருந்தகக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து, கட்டடத்தை பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி சீனிவாசன், தமிழக அரசின் தொழிலாளா் திறன் மேம்பாட்டு வாரிய உறுப்பினா் அன்பழகன், ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, ஒன்றியச் செயலா்கள் மோகன், துரைமாமது, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, கால்நடை உதவி மருத்துவா்கள் தமிழரசன், கிருஷ்ணகுமாா், சதீஷ்குமாா், வட்டாட்சியா், கௌரி, திமுக ஒன்றியச் செயலா்கள் சீனிவாசன், தினகரன், மணிவண்ணன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஜெயந்தி பிரகாஷ், அருள் தேவி செந்தில்குமாா், பெருமாள், மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu