வெம்பாக்கம் ஒன்றியத்தில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

வெம்பாக்கம் ஒன்றியத்தில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
X

வெம்பாக்கம் ஒன்றியத்தில் புதிய பள்ளிக் கட்டடங்களை  திறந்து வைத்த எம்எல்ஏ ஜோதி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியத்தில் புதிய பள்ளிக் கட்டடங்களை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூபாய் 2.30 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் வெம்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட மணப்பாக்கம் கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 54 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி தொடக்க விழா மற்றும் பிரம்மதேசம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 1.78 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோதி கலந்துகொண்டு அனைத்து பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒப்பந்தகாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!