/* */

செய்யாறு பகுதியில் புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

செய்யாறு பகுதியில் புதிய நியாய விலை கடைகளை எம் எல் ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செய்யாறு பகுதியில் புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு
X

மார்க்கெட் கமிட்டியை  திடீர் ஆய்வு செய்த ஜோதி எம்எல்ஏ.

https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-o-jyoti-mla-in-the-regulation-sales-hall-sudden-inspection-532351

செய்யாற்றை அடுத்த வடமனப்பாக்கம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை , கூட்டுறவு பால் சங்க கட்டிடம் வெம்பாக்கத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை ஆகியவை தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட வடமனப்பாக்கம் மற்றும் வெம்பாக்கம் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக பகுதி நேர நியாய விலை கடைகள் திறந்திட செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி நடவடிக்கை மேற்கொண்டார்.

அதேபோல் வெம்பாக்கம் ஒன்றியம் வட மனப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் 16 லட்சத்தில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டப்பட்டது.

பகுதிநேர நியாய விலைக் கடைகள் கூட்டுறவு பால் சங்க கட்டிடம் தொடக்க விழா ஆகியவை நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய தலைவர் ராஜு தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி, பங்கேற்று நியாய விலை கடைகள் , பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு பால்வளத்துறை இணை இயக்குனர் சந்திரசேகர ராஜா , மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் தெய்வமணி , ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் கமிட்டியை நேற்று ஒ. ஜோதி எம்எல்ஏ திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பயறு வகை மற்றும் நெல்மணிகளை கொண்டு வந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சில விவசாயிகள் எம்எல்ஏவிடம் காலை 8 மணிக்கு மேல் கேட்டை மூடி விடுவதாகவும், பயறு வகைகளுக்கு குறைந்த பணம் கொடுக்கவே ஒரு வாரம் காலதாமதம் ஆகுவதாகவும், இந்த இதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜி, ஒன்றிய செயலாளர்கள் ஞானவேலு, ரவிக்குமார், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், மங்கலம் பாபு, பார்த்திபன், ராம் ரவி, துரைசாமி விவசாயிகள், வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 6 Nov 2022 1:56 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி