செய்யாறில் பள்ளிக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா

செய்யாறில் பள்ளிக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா
X

வெம்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்ற பல்வேறு துவக்க விழா நிகழ்சிகள்

செய்யாறு வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளிக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 1.50 லட்சத்தில் சைக்கிள் நிறுத்தும் இடம் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் பழங்குடியினர் சமுதாயத்தவர் 15 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச மனைப் பட்டா வழங்குதல், ஊராட்சி நிதி மூலம் ரூபாய் 8 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா, உமையாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கனிம வள மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 17 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிட திறப்பு விழா , குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார் . வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதி பங்கேற்று வளர்ச்சி திட்டப் பணிகள், இலவச மனைப் பட்டா வழங்குதல் மற்றும் புத்தாக்க பயிற்சி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர்கள், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்