மின்னல் பாய்ந்து இளைஞர் பலி; மூவர் படுகாயம்

மின்னல் பாய்ந்து இளைஞர் பலி; மூவர் படுகாயம்
செய்யாறு அருகே விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்தபோது, மின்னல் பாய்ந்து இளைஞர் பலி 3 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ் புதுபாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி தணிகாசலம், இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் சமன் செய்து கொண்டிருந்தார். அதனை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று மழை வலுத்து, இவர்கள் 4 பேர் மீதும் மின்னல் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் இவர்கள் 4 பேரையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதியழகன் என்பவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story