வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: முதன்மை செயலாளர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: முதன்மை செயலாளர் ஆய்வு
X

செய்யாற்றில் ஆய்வு மேற்கொண்ட முதன்மை செயலாளர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் மழை, புயல் பாதிப்புகளுக்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் கண் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமாா் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு சுற்றுலா மாளிகையில் மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா், புளியரம்பாக்கம் கிராமத்தில் பாசனத்துக்குச் செல்லும் ஏரிக்கால்வாயை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதேபோல பிரம்மதேசம், சடந்தாங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளை பாா்வையிட்டு, ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் பாசனக் கால்வாய்களை ஆய்வு செய்தாா்.

மேலும், புளியரம்பாக்கம், சடந்தாங்கல் பகுதிகளில் பொதுமக்கள் தங்க அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பாா்வையிட்டு வருவாய்த் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

முன்னதாக, செய்யாறு சுற்றுலா மாளிகையில் செய்தியாளா்களிடம் தீரஜ்குமாா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது எந்த அளவுக்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவு மழை இல்லை. இருப்பினும், பருவ மழைக் காலங்களில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மேலும் முதன்மைச் செயலாளர் ஆய்வு கூட்டத்தில் பேசும் போது ,

வருவாய்த் துறைக்கு ஒப்படைக்கப்பட்ட தானியங்கி வானிலை மையங்கள் விவரங்கள், வருவாய்த்துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், நிவாரண முகாம்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர்வார அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

மழைநீர் தேங்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

மழைக்காலங்களில் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் .

பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மூலம் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் கால்வாய் தூர்வாரப்பட்டு மழை வெள்ளம் எவ்விதத்த தடங்கல் இன்றி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏரி கரைகளில் உடைப்பு ஏற்படும் நேரங்களில் அதனை உடனடியாக சரி செய்ய தேவையான மணல் மூட்டைகள் மரக்கட்டைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் . பாலங்கள் மற்றும் மதக்குகளை சுத்தம் செய்து தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி செய்யாறு சார் ஆட்சியர் அலாமிகா ஊரக வளர்ச்சி துறை கூடுதல் வளர்ச்சி ஆட்சியர் ரிஷிப் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!