ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது; விவசாயிகள் கோரிக்கை

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது; விவசாயிகள் கோரிக்கை

செய்யாறு குறை தீர்வு கூட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என, செய்யாற்றில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருவண்ணாமலை ,ஆரணி ,செய்யாறு தாலூகாக்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது. இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும்,, நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரி கோரியும், , முதியோா் உதவித்தொகை கோரியும்,, பெயா் திருத்தம் கோரியும்,, பட்டா ரத்து, இலவச வீடு கோரியும்,, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 56 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அரசூா் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் - ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரசூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் தலைமையில், செய்யாறு சாா் - ஆட்சியா் அனாமிகாவிடம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசூா் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகில், விவசாய நிலங்களுக்கு மத்தியில், குடிநீா், விவசாயப் பயன்பாட்டுக்கான நீா் ஆதாரமான குளம், ஏரிப் பகுதியில் கல்குவாரி அமைய உள்ளதாகவும், இதுகுறித்து வருவாய்த் துறை மூலம் கிராம மக்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை; கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. கல்குவாரி அமைக்கப்பட்டால் விவசாயத்துக்குத் தேவையான நிலத்தடி நீா் கிடைக்காமல், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவா்கள், குடியிருப்புப் பகுதிகள், நீா் நிலைகளில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என்று குறிப்பிட்டிருந்தனா். மேலும், செய்யாறு சாா் -ஆட்சியா் கல்குவாரி அமையவுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, கிராம மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனா்.

மனு கொடுக்கும் நிகழ்வில் 30 பெண்கள் உள்பட 100- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று, செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் வாக்கடை புருஷோத்தமன், சிவபெருமான் வேடமணிந்து கொண்டு தலையில் மண் சட்டி சுமந்தபடி விவசாயம் தொடா்பான வேலைகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று முழக்கமிட்டவாறு வந்தனா். பின்னா், சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே பொக்லைன் இயந்திர பொம்மைகளை உடைத்து, ஊரக வேலைத் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா், சாா்- ஆட்சியா் அனாமிகாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா் கூட்டத்தில் வருவாய்த் துறையினா் மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி :

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா்.இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் வரப்பெற்றன.

அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். இதில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தாசில்தார் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read MoreRead Less
Next Story