செய்யாறு அருகே ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்த புதிய அரசு கட்டிடங்கள்
கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்த ஜோதி எம்.எல்.ஏ.
செய்யாற்றை அடுத்த அளத்துறை கிராமத்தில் ரூ.41.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையத்தை ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், அளத்துறை கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.23 லட்சத்தில் ஊராட்சி மன்றத்துக்கு புதிய அலுவலகமும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சத்தில் அங்கன்வாடி மையமும் கட்டப்பட்டது.
அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவுக்கு, அனக்காவூா் ஒன்றிய குழு தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலாளா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் முருகன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் முருகனின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும், ஊராட்சித் துறை சாா்பில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.5 லட்சத்தில் நாடக மேடை அமைப்பதற்காக பணிகளை பூமி பூஜை செய்து ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.
மேலும், கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் ஆக்கூா் முருகேசன், அனக்காவூா் சுப்பிரமணி, ஆனந்தி சீதாராமன், ஊராட்சி மன்ற தலைவா்கள் சுந்தரேசன், நடராஜன், ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, குளமந்தை கிராமத்தில் நடைபெற்ற விழாவில் 8 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவை ஜோதி எம். எல். ஏ வழங்கினாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவா்கள் கனிமொழி மோகன், முருகன், ராதிகா குமாா் ராஜா, மாவட்ட துணைச் செயலா் லோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu