செய்யாற்றில் புதிய நியாய விலை கடை திறப்பு

செய்யாற்றில் புதிய நியாய விலை கடை திறப்பு
X

நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய எம்எல்ஏ ஜோதி

செய்யாற்று பகுதியில் புதிய நியாய விலை கடை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் எறையூர் , திரும்பூண்டி, ஆகிய இரு கிராமங்களில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பகுதி நேர புதிய நியாய விலை கடைகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்று குழு உறுப்பினர்கள் மகாலட்சுமி ,பூங்கொடி ,ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து கோவிலூர் கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து கோவிலூர் கிராமத்திற்கு செல்லும் புதிய வழித்தட பேருந்தை துவக்கி வைக்கும் விழா செய்யாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு எம்எல்ஏ ஜோதி தலைமை தாங்கி கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் ,விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் ,போக்குவரத்து துறை அலுவலர்கள் ,சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய பேருந்து செய்யாற்றில் புறப்பட்டு விநாயகபுரம் நல்லா வளம் வழியாக கோவிலூர் சென்றடையும் மீண்டும் கோவிலூரில் இருந்து அதே வழித்தடத்தில் செய்யாறு வந்து சேரும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்