குடியிருப்பு பகுதியில் வெள்ளம்: பொதுமக்களை பத்திரமாக மீட்ட காவல்துறை

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்:  பொதுமக்களை  பத்திரமாக மீட்ட காவல்துறை
X

வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர்

குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்த நிலையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர்

செய்யாறு அருகே பூதேரி புள்ளவாக்கம் ஏரி நிரம்பி வெளியான வெள்ளநீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தகவலறிந்த செய்யாறு காவல் ஆய்வாளர் மற்றும் பேரிடர் மீட்பு குழு காவலர்கள் விரைந்து சென்று அங்கு சிக்கியிருந்த 6 குழந்தைகள் உட்பட 40 பேரை மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் வெள்ளம் வடிவதற்கு ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளரின் இச்செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!