8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறித் தேர்வு: 15வது இடத்தில் திருவண்ணாமலை

திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்
தேசிய திறனறித் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுமார் 600 அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் சுமார் 4,300 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று எழுதினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மூன்றாம் தேதி நடந்த தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 170 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் பதினைந்தாவது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 17 பேர் தேர்வு எழுதியதில் நான்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் விஜய, சாமுண்டீஸ்வரி, உஷாராணி , ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி உமா மகேஸ்வரி, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரமேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை பாராட்டினர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பவன், மௌசிக், சர்வேஸ்வரன், யோக பிரகாஷ் ஆகிய நான்கு மாணவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ரூபாய் 1000 மாதம் தோறும் என நான்கு ஆண்டுகளுக்கு தலா ரூபாய் 48,000 தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் சாந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் வசந்த், தேசிய திறனறித் தேர்வில் பங்கேற்று வந்தவாசி வட்டார அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை காவேரி, கிருஷ்ணா கல்வி மையம் முதல்வர் சீனிவாசன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu