செய்யாறு தாலுகாவில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறு தாலுகாவில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

செய்யாறு தாலுகாவில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராந்தம் கிராமத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கல்வி இயக்குனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் கல்வி மூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சம்பத் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் நலக்கல்வி அலுவலர்கள் சங்கர், எல்லப்பன் ஆகியோர் பங்கேற்று தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஆனந்தன். ராகவன். ஆசிரியர்கள் ஜூபீலி, செல்வி மற்றும் மருந்தியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!