என் குப்பை என் பொறுப்பு: உறுதி எடுத்த மாணவ -மாணவிகள்

என் குப்பை என் பொறுப்பு: உறுதி எடுத்த மாணவ -மாணவிகள்
X

என் குப்பை என் பொறுப்பு என  மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

செய்யாறு அருகே ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டம் பற்றி அரசு பள்ளி மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டி தமிழக அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் இயக்கம் குறித்த என் குப்பை என் பொறுப்பு என்கிற விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்திடும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் அ.மோகனவேல் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ரகுராமன், துப்பரவு அலுவலர் சீனுவாசன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜெயகாந்தன், உமாமகேஸ்வரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் மகராசன் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் என் குப்பை என் பொறுப்பு என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!