என் குப்பை என் பொறுப்பு மக்கள் இயக்க விழிப்புணர்வு போட்டி பரிசளிப்பு விழா

என் குப்பை என் பொறுப்பு மக்கள் இயக்க விழிப்புணர்வு போட்டி பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ஜோதி.

செய்யாற்றில் என் குப்பை என் பொறுப்பு மக்கள் இயக்க விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என் குப்பை என் பொறுப்பு மக்கள் இயக்க விழிப்புணர்வு குறித்த கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ரகுராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்ற ஆய்வாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story