நகரி திண்டிவனம் புதிய ரயில்வே பாதை திட்டப்பணி: விஷ்ணுபிரசாத் எம்பி ஆய்வு
நகரி திண்டிவனம் புதிய ரயில் பாதைக்கான நில ஆர்ஜித அலுவலகத்தில் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆய்வு செய்தார்
நகரி திண்டிவனம் புதிய ரயில்வே பாதை திட்டப்பணி குறித்து செய்யாற்றில் விஷ்ணுபிரசாத் எம்பி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நகரி - திண்டிவனம் புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நில ஆர்ஜிதம் செய்வதாக கூறி வருவாய்த்துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர். கிடப்பில் உள்ள திட்டத்தை மீண்டும் மேம்படுத்துவதற்காக ஆய்வு செய்து வருகிறேன்.
33 கிராமங்களில் 494 ஏக்கர் நிலப்பரப்பை ஆர்ஜிதம் செய்தால்தான் புதிய ரயில் பாதை திட்டம் உருவாகும். இதுவரை 150 ஏக்கருக்கு கிராம மக்களிடம் பேசி அவர்களுடைய நிலங்களை கையகப்படுத்துவதற்கான சம்மதம் பெற்று அதற்கான வேலைகளை செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளை நியமித்து நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைக்க உறுதி அளித்துள்ளார். இத்திட்டத்திற்கு தேவையான மீதம் உள்ள நிலங்களை இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுவதுமாக நில ஆர்ஜிதம் செய்து புதிய ரயில் பாதை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ரயில்பாதை திட்டத்தால் விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்கள் பயன்பெறும் என்றார்.
முன்னதாக செய்யாற்றில் செயல்பட்டுவரும் நகரி திண்டிவனம் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நில ஆர்ஜித அலுவலகத்தில் நில ஆர்ஜித பணிகள் குறித்து விஷ்ணு பிரசாத் எம் பி கேட்டறிந்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu