செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா

செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா
X

சமுதாய வளைகாப்பு விழாவில் கர்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்

செய்யாறில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியங்கள் , செய்யாறு நகராட்சி சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று 150 கர்ப்பிணிகளுக்கு தலா ரூபாய் 400 மதிப்பிலான புடவை, வளையல் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வாழ்வில் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், ஒன்றிய குழு தலைவர்கள், செய்யாறு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!