செய்யாற்றில் புதிய வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயக்கம்
செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஓ ஜோதி பங்கேற்ற பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவு நேர பேருந்து தடம் எண்.201, நகரப்பேருந்து எண். 56ஏ செய்யாறு - பிரம்மதேசம் - புலிவலம் - சுனைப்பட்டு ஆகிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்யாறு பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து துறை துணை மேலாளர்கள் (தொழில்நுட்பம்) ரகுராமன், (வணிகம்) நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆயிரம் ரூபாய்க்கு பயணச்சீட்டு பெற்று சிறிது தூரம் பேருந்தை ஒட்டி சென்றார். அப்போது பேருந்தில் பயணம் செய்த கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கிளை மேலாளர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் வெம்பாக்கம் ராஜு, அனக்காவூர் திலகவதி ராஜ்குமார், மண்டல பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் மண்டல பொருளாளர் மோகனரங்கன், மண்டல தலைவர் துரைசாமி, பணிமனை செயலாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், ஞானவேல், விஜயபாஸ்கர், சின்னதுரை, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu