செய்யாறு அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ நேரில் ஆய்வு
செய்யாறு அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள நவீன ஆய்வகத்தை ஆய்வு செய்த ஜோதி ,எம்.எல்.ஏ
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நவீன ஆய்வகம், கண் அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆய்வு செய்தாா்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள நவீன ஆய்வகம் மற்றும் கண் அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் ஒரு இணைந்த நவீன ஆய்வகம் மற்றும் கண் அறுவை சிகிச்சை மையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி பாலாஜி, செய்யாறு திமுக நகர செயலாளர் விஸ்வநாதன், நகர மன்ற உறுப்பினர்கள் செவிலியர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்யாறு ஒன்றியத்தில் ரூ.17.33 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.33 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவா்கள் பாண்டியன், ராஜன்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் ஜெய்சங்கா் வரவேற்றாா்.
கூட்டத்தில், புளியரம்பாக்கம், வடதண்டலம் ஆகிய கிராமங்களில் தலா ரூ.6 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அமைத்தல் மற்றும் ரூ.78.50 லட்சத்தில் மேல்நாகரம்பேடு, பெருங்களத்தூா், ராமகிருஷ்ணபுரம், நாவல்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் அங்கன்வாடி, பயணிகள் நிழற்கூடம், சாலைப்பணி, சிறிய பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது, ரூ.94.81 லட்சத்தில் பைங்கினா், கடுகனூா், மேல்சீசமங்கலம், கீழ்புதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கழிவு நீா் கால்வாய், மேல்நிலை குடிநீா் தொட்டிகளுக்கு புதிய குழாய் வசதி, ஆற்று குடிநீா் திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.17.33 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், ஓன்றியக்குழு உறுப்பினா் பாலகோபால், பைங்கினா் ஊராட்சிக்குள்பட்ட பாரி நகரில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை திறக்க வலியுறுத்தினாா். மேல்சீசமங்கலம் தீபா ஆதிதிராவிடா் காலனி பகுதிக்கு கழிவு நீா் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன்பாபு பதிலளித்து பேசுகையில், 'மக்களுடன் முதல்வா்' திட்ட முகாம்கள் நிறைவடைந்த பின்னா், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu