செய்யாறு நகர மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்குவாதம்..
Thiruvathipuram
Thiruvathipuram-செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியின் நகர மன்ற கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குல்சார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் வார்டில் உள்ள குறைகளை குறித்து பேசினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நகா்மன்ற உறுப்பினா்கள்
தங்கள் வாா்டு பகுதிகளில் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததால் கழிவு நீா்தேங்கி கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், குப்பைகள் ஆங்காங்கே தேங்கி துா்நாற்றம் வீசுகிறது, குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது.
நான்கு நாள்களுக்கு ஒரு முறையும், சில இடங்களில் ஏழு நாள்களுக்கு ஒரு முறை தான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்றனா். கால்வாய் தூய்மைப்படுத்துதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிா்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அதே போல் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சி அலுவலா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்காத நகராட்சிப் பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உறுப்பினர் சவுந்தரராஜன் பேசுகையில், தமிழக அரசு அறிவிப்பின்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலருக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையினை அகற்றி அனைவரும் சமம் என்ற அரசின் அறிவிப்பின்படி சமமான இருக்கையில் அமர்ந்து உள்ளார். அதன்படி மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் என சமமாக இருக்கை அமைக்க வேண்டும். தற்போதுள்ள தலைவருக்கான உயரமான இருக்கையை அகற்ற வேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்த நகரமன்ற தலைவர், அதற்கான உத்தரவு நகலினை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னா் திருவத்திபுரம் நகர எல்லைக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் தரைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட 300 - க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால் அவற்றின்மூலம் நாளொன்றுக்கு 3,000 கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், 25 சதுர அடி வரையிலான கடை ஒன்றுக்கு தினந்தோறும் ரூ.50, திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் ரூ.50 என சோத்து ரூ.100 வசூலிக்கவும், 25 சதுர அடிக்கு மேல் உள்ள ஒவ்வொரு 25 சதுர அடிக்கும் ரூ.100 கூடுதல் கட்டணமாக வசூல் செய்தல், திருவத்திபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்க ரூ. 43 லட்சத்தில் கட்டடம் கட்டுதல், கலைஞா் நகா்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் வேல்சோமசுந்தரம் நகரில் ரூ.46 லட்சத்தில் பூங்கா அமைத்தல், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதுத்தெருவில் ரூ.45.50 லட்சத்தில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu