திருவண்ணாமலை: வெம்பாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் கொள்ளை

திருவண்ணாமலை: வெம்பாக்கத்தில் உள்ள  ஜவுளிக்கடையில் கொள்ளை
X

திருட்டு நடந்த ஜவுளி கடை.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் அருகில் ஜவுளிக்கடையில் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், 2வது புது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 61). இவர் வெம்பாக்கம் மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை ராமச்சந்திரன் மூடிவிட்டு சென்றார். வழக்கம் போல் இன்று காலையில் கடையைத் திறந்தார். அப்போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.90 ஆயிரம், கண்காணிப்பு கேமரா மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணரை வரவைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருடுபோன துணிக்கடை கடந்த ஜனவரி மாதம் தான் திறக்கப்பட்டது. தற்போது மேல்மாடி கட்டிட வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் திருடிய நபர் மேல்மாடி வழியாகச் சென்று கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future