செய்யாற்றில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்..!
பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், மாணவ மாணவியர் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் செய்யாற்றில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தத் திட்ட முகாமுக்கு செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று வேளாண் துறை சாா்பில் 13 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.23.60 லட்சம் கடனுதவிக்கான உத்தரவு, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் 10 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடனுதவிக்கான உத்தரவும், இருவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 651 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் 4 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, ஒருவருக்கு இயற்கை இடா்பாடு நிவாரணத் தொகை, 7 பேருக்கு ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்துக்கான ஆணை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்..
அதனைத் தொடர்ந்து செய்யார் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் , மருந்துகள் இருப்பு விவரம் மற்றும் மருத்துவமனைக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு ஆதிதிராவிடர் நல மாணவ மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு விபரம் குறித்து கேட்டு அறிந்தும், மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தும் , அவர்களின் வருகை விபரம் குறித்து பதிவேட்டினை ஆய்வு செய்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடம் ஆகியவற்றினையும் ஆய்வு மேற்கொண்டார்.
செய்யார் அரசு பேருந்து நிலையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு பேருந்து நடை பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டும், அங்கு பேருந்துக்கு காத்திருந்த பயணிகளிடம் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
கலைக் கல்லூரியில் உள்ள வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,
செய்யாறு கல்வி வட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசியம் முன்னெடுப்புகள் குறித்து செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 173 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், விடுதி காப்பாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu