உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு : போலீஸாருக்கு எஸ்பி அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு : போலீஸாருக்கு  எஸ்பி அறிவுரை
X

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து செய்யாறு, வந்தவாசி உள்கோட்ட பகுதிகளை சேர்ந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாருக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து செய்யாறு, வந்தவாசி உள்கோட்ட பகுதிகளை சேர்ந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாருக்கு அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் பெரணமல்லூர் , தேசூர் ,ஆகிய பேரூராட்சிகளில் 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின்போது காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், பதற்றமான நேரங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அறிவுரைகளை வழங்கினார்.

அவசர காலங்களில் காவலர்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், வாக்கு மையங்களில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தெரிவித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருதல், அமைதியான முறையில் தேர்தலை நடத்துங்கள் என பல்வேறு ஆலோசனைகளை காவலர்களுக்கு வழங்கினார்.

மேலும் நகராட்சி அலுவலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லுதல் குறித்து அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்