சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

போளூரில் சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வீரப்பன் தெருவில் தனியார் சிமெண்ட் கடை உள்ளது. இங்கு குருவிமலை கிராமத்தை சேர்ந்த குமரேசன், என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், காலை வழக்கம்போல் குமரேசன் கடையை திறந்தார். பின்னர், வாடிக்கையாளர் ஒருவருக்கு சிமெண்ட் எடுத்து தர முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அனைத்து சிமெண்ட் மூட்டைகளும் சரிந்து விழுந்தன. இதில், சுந்தரேசன் சிக்கிக்கொண்டு எதிரே உள்ள சுவற்றின் மீது மோதி படுகாயம் அடைந்தார்பின்னர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போளூர் சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த குமரேசனின் மனைவி வளர்மதி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமெண்ட் மூட்டைகள் சரிந்து கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு வருகை குளியலறையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்

செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஆனந்தன். இவர் தனது வீட்டுக் குளியல் அறையில் கால் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார் . அவரை செய்யார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் செய்யார் காவல் உதவி ஆய்வாளர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....