செய்யாற்றில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த ஜோதி எம்.எல்.ஏ.

செய்யாற்றில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த ஜோதி எம்.எல்.ஏ.
X

செய்யாற்றில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ ஜோதி

செய்யாற்றில் புதிய கட்டிடங்களை எம்.எல்.ஏ. ஜோதி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ. 1.13 கோடியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை ஜோதி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வடகல்பாக்கம் கிராமத்தில் ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், சுருட்டல் கிராமத்தில் ரூ.15.36 லட்சத்தில் அங்கவாடி மையக் கட்டடம், பகுதியில் ரூ.10.40 லட்சத்தில் சிமென்ட் சாலை, புன்னை கிராமத்தில் ரூ.29.40 லட்சத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம், நெமிலி கிராமத்தில் ரூ.27.15 லட்சத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் தாா்ச் சாலை, ரூ.10.89 லட்சத்தில் சிறு பாலம் மற்றும் கழிவுநீா்க் கால்வாய், ரூ.10 லட்சத்தில் பள்ளி நுழைவாயில் ஆகிய வளா்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இவைகளின் திறப்பு விழாவுக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜீ , தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனசுந்தரம், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பூனைத்தாங்கல் கிராமத்தில் உள்ளவா்கள் குப்பை சேகரிக்க உதவிடும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் தொட்டியை எம்எல்ஏ வழங்கினாா்.

தொடா்ந்து , வெம்பாக்கம் ஒன்றியத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, மாமண்டூா், கல்பாக்கம், கீழ்நாயக்கன்பாளையம், மேனலூா், குண்டியாந்தண்டலம், சுருட்டல், பாவூா், சிறுநல்லூா், ஆக்கூா் கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் திமுக கொடியேற்றி, கிராம மக்களுக்கு இனிப்பு, அன்னதானம், வேட்டி, சேலை, மரக்கன்றுகள், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சங்கா், தினகரன், சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஊராட்சி செயலாளர்கள் ,உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி