திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வது நாளாக ஜமாபந்தி: மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர்
பொதுமக்களிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) 19.06.2024 அன்று முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் அன்று தூசி உள்வட்டத்திற்குட்பட்ட 18 கிராமத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 77 மனுக்களும், இரண்டாம் நாளன்று தூசி மற்றும் வெம்பாக்கம் உள்வட்டத்திற்குட்பட்ட 19 கிராமத்தைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து 202 மனுக்களும், முன்றாம் நாளன்று வெம்பாக்கம் உள்வட்டத்திற்குட்பட்ட 20 கிராமத்தைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் என 799 மனுக்களை பெற்று சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று 4 வது நாளாக வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய்த் தீர்வாய கணக்கு தணிக்கை மற்றும் மனுக்கள் மீது திர்வு காணும் நிகழ்ச்சியில் நாட்டேரி உள்வட்டத்திற்குட்பட்ட அரியூர், பலமுகை, பிரம்மதேசம் , ஈட்டுவந்தாங்கள், சிறுவஞ்சிப்பட்டு, இருமரம், மூஞ்சூர்பட்டு, சீவரம், சிறுநாவல்பட்டு, நாட்டேரி, வட இலுப்பை, செய்யனூர், புலிவலம், பூந்தண்டலம் மற்றும் கனைப்பட்டு ஆகிய 15 கிராம பொதுமக்களிடமிருந்து கீழ்கண்டவாறு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பட்டா மாறுதல் 141, உட்பிரிவு பட்டா மறுதல் 44, அளந்து அத்து காட்டுதல் - 8, ஆக்கரமிப்புகளை அகற்றுதல் 7. புதிய குடும்ப அட்டை கோரி-9, இலவச வீட்டுமனைபட்டா 27, முதியோர் / மாற்றுத்திறனாளி உதவித்தொகை 25 இதர துறைகள். 104, இதர மனுக்கள் 10 ஆக மொத்தம் 375 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
இதில் இலுப்பை கிராமத்தை சேர்ந்த இருளர் வகுப்பைச் சார்ந்த 5 குடும்பத்தினர் புதிய குடும்ப அட்டை வழங்க கோரி நேரில் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை இணை இயக்குநா் ஹரகுமாா் ,உதவி இயக்குநர் நில அளவைப் பதிவேடுகள் துறை திருநாவுகரசு, வெம்பாக்கம் வட்டாட்சியர் துளசிராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பெருமாள், அலுவலகமேலாளர் (பொது) ரவி மற்றும் அனைத்து துறையை அலுவலர்கள் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu