செய்யாறு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் திடீா் சோதனை..!

செய்யாறு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் திடீா் சோதனை..!
X

கோப்பு படம் 

செய்யாற்றில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினா் திடீா் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினா் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீா் சோதனை மேற்கொண்டனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பங்களா தெருவில் உள்ள நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12:30 மணியளவில் 8 கார்களில் 40 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திரங்கினர்.

அப்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நெடுஞ்சாலை துறை அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வருமான வரித்துறையினர் ஒரு குழுவினர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் காத்திருந்தனர். மற்ற குழுவினர் அருகிலுள்ள ஏழு கடைகளில் திடீரென சோதனை நடத்த தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஒரு கடையின் மாடியில் இருந்த இரண்டு வீடுகளிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதே போல் லோகநாதன் தெருவில் உள்ள துணிக்கடை மற்றும் பேன்சி ஸ்டோரிலும் சோதனைகளை நடத்தியுள்ளனர். அப்போது துணிக்கடையின் ஊழியர் நீங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதற்கான அடையாள அட்டையை காண்பியுங்கள் என கேட்டதற்கு அடையாள அட்டையை காண்பித்து விட்டு சோதனையை தொடங்கியுள்ளனர்.

சிறிது நேரத்தில் சோதனையை முடித்துவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இந்த சோதனை குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் மாலை 3 மணி அளவில் அலுவலகம் வந்து அலுவலகத்தை திறந்து காண்பித்துள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனையை தொடங்கினர் .இந்த சோதனையை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தச் சோதனையின்போது, ஆவணங்களோ பணமோ பரிசுப் பொருள்கள் எதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture