செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கல்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கல்
X

ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற செய்யாறு அரசு மருத்துவமனை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கியது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ மதிப்பீட்டு குழு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கியது.

தேசிய தர நிலை உறுதிச் சான்று மதிப்பீட்டு குழு அலுவலர்கள் கடந்த டிசம்பர் மாதம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து மதிப்பீட்டு குழுவினர் மருத்துவமனைக்கு 98 சதவீத மதிப்பெண்கள் அளித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மருத்துவமனை யின் பதிவேடுகள் அடிப்படையிலும், மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரிலும், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழை வழங்கினார்.

மத்திய அரசு வழங்கியுள்ள தரச்சான்று மூலம் சிறப்பான மருத்துவம் அளித்து வருவதற்கான அங்கீகாரம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது . மேலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படுக்கைக்கு ரூபாய் 1000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 22 லட்சம் வரை மத்திய அரசின் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிதி மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags

Next Story
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!