செய்யாறில் பள்ளி பேருந்துகள் ஆய்வு: 12 வாகனங்கள் தகுதி நீக்கம்

செய்யாறில் பள்ளி பேருந்துகள் ஆய்வு:  12 வாகனங்கள் தகுதி நீக்கம்
X

பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்.

செய்யாறில் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து 12 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிப் பேருந்துகள் சாலையில் இயக்கும் வகையில் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, 121 பள்ளிகள் மூலம் இயக்கப்படும் 306 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பேருந்துகளில் அவசர கால உதவி வழி இருக்க வேண்டும்.

முதலுதவி சிகிச்சை அளிக்க பேருந்துகளில் முதலுதவி மருந்துப் பெட்டி வைத்திருக்க வேண்டும். தீத்தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகள் செல்லும் பேருந்துகளை பெற்றோா் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பேருந்தின் தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியா் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆரணி திருவண்ணாமலை பகுதிகளில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் செய்யாற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பள்ளி பஸ், வேன்களை ஆய்வு செய்து, 12 வாகனங்களின் குறைகளை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் 37 தனியாா் பள்ளிகள் மூலம் சுமாா் 250 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அரசு உத்தரவின் பேரில், செய்யாறு அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் தலைமையில் 185 தனியாா் பள்ளி வாகனங்கள் (வேன், பேருந்து) ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று ஓட்டுநா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினா். ஆதனைத் தொடா்ந்து மேலும், செய்யாறு தீயணைப்பு அலுவலா்கள் மனோகரன், மாசிலாமணி, மோட்டாா் வாகன போக்குவரத்து துணை ஆய்வாளா் கருணாநிதி பங்கேற்று ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு முறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினா்.

ஆய்வின்போது, கல்வித் துறை சாா்பில் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், வருவாய்த் துறை சாா்பில் சாா் -ஆட்சியரின் நேர்முக உதவியாளா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சரி செய்து வர 3 வேன்கள், 9 பேருந்துகள் என 12 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Tags

Next Story
ai solutions for small business