செய்யாறு அருகே புதிய மின் மாற்றிகள் பள்ளி கட்டிடங்கள் திறப்பு

செய்யாறு அருகே புதிய மின் மாற்றிகள் பள்ளி கட்டிடங்கள் திறப்பு
X

புதிய மின் மாற்றி களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த ஜோதி எம்எல்ஏ

செய்யாறு அருகே புதிய மின் மாற்றிகள் பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

செய்யாறுஅடுத்த நெடும்பிறையில் இரண்டு புதிய மின் மாற்றிக்கள் ,பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிவறை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், நெடும்பிறை ஜே ஜே நகர், மேல்நிலைப்பள்ளி பின்புறம் கோயில் அருகில் ஆகிய இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யாறு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஒ. ஜோதி தலைமை தாங்கி ,மின்மாற்றிகள், கழிப்பறை கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஞானவேல் வரவேற்றார். தொண்டரணி அமைப்பாளர் ராமரவி, தொழிலாளர் அணி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரேசன், பார்த்திபன், ஒன்றிய பொருளாளர் அருள், துணை செயலாளர் சக்திவேல் ,ஊராட்சி தலைவர் மேகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீதா லட்சுமி, தொழிற்சங்க பிரதிநிதி ஜெயராமன், பொறியாளர் வி. கிருஷ்ணன், தலைமை ஆ சி ரி ய ர் சுந்தரமூர்த்தி,மின்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்.

பாமகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பாமகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

வெம்பாக்கம் மத்திய ஒன்றியம், திருப்பனமூர் ஊராட்சிக்குட்பட்ட சேலேரி கிராமத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளரும் மாவட்ட பிரதிநிதியான சசிகுமார், கிளை செயலாளர் பிரதாப் ஆகியோர் தலைமையில் பாமகவை சேர்ந்த 50 பேர் செய்யாறு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஜோதி எம்எல்ஏ , வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த பாமகவினருக்கு ஜோதி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஒன்றிய இளைஞரணி குமார், ரவி, பிச்சாண்டி உள்பட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!