செய்யாற்றில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

செய்யாற்றில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

ரேஷன் கடையை திறந்து வைத்த செய்யாறு எம் எல் ஏ ஜோதி

செய்யாற்றில் புதிய அங்கன்வாடி கட்டிடம். நியாய விலை கடைகளை ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அனக்காவூர் ஒன்றியம், வீரம்பாக்கம் புதூரில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனருமான தரணிவேந்தன் மற்றும் ஜோதி எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

புதிய ரேசன் கடை திறப்பு

செய்யாறு டவுன், கொடநகர் 9-வது வார்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்ஷார், கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read MoreRead Less
Next Story