செய்யாற்றில் அரசுப் பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

செய்யாற்றில் அரசுப் பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

செய்யாற்றில் அரசுப் பள்ளியில் நவீன கழிப்பறையை  திறந்து வைத்த  எம்எல்ஏ ஜோதி 

செய்யாற்றில் அரசுப் பள்ளியில் நவீன கழிப்பறையை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் குமரன் தெருவில் செயல்படும் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் 2022 - 23ம் ஆண்டு தொடக்கக் கல்வி நிதியின் கீழ், ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை தொகுதி எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் மோகனவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்சாா் முன்னிலை வகித்தாா். ஆணையாளா் ரகுராமன் வரவேற்றாா்.

திருவத்திபுரம் நகராட்சி சாா்பில், செய்யாறு சந்தைப் பகுதியில் புதிதாக திருமண மண்டபம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இடத்தை எம்எல்ஏ பாா்வையிட்டாா்.

பின்னா், செய்யாறு நகர திமுக அலுவலகத்துக்காக வழூா்பேட்டை பட்சீஸ்வரன் கோயில் அருகே நடைபெற்று வரும் கட்டடப் பணியை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளா் மதனராசன், நகா்மன்ற உறுப்பினா்கள் விஸ்வநாதன், செந்தில், விஜயலட்சுமி, அகமது, காா்த்திகேயன், கங்காதரன், சேகா் மற்றும் திமுக நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, பாலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Read MoreRead Less
Next Story