செய்யாறில் பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி குடியேறும் போராட்டம்

செய்யாறில் பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி குடியேறும் போராட்டம்
X

பழங்குடியினருக்கு வீட்டு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

செய்யாறில் பழங்குடியினருக்கு வீட்டு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்டோருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்க வட்டார செயலாளர் பிரியா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்யாறு வட்டம் வளர்புரம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும், செய்யாறு நகர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், என வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி செய்யாறு வட்டாட்சியர் இடம் கோரிக்கை மனு அளித்தனர். வட்டார நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!