/* */

'கடலில் பேனா வைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கும்' - அன்புமணி ராமதாஸ் 'அட்வைஸ்'

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில் நடந்த பாமக விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

HIGHLIGHTS

கடலில் பேனா வைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கும் - அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்
X

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில், பாமக 2.0 விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் சில நல்ல அம்சங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம். திண்டிவனம் - நகரி ரயில்வே திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில்வே திட்டம், மொரப்பூர் - தருமபுரி ரயில்வே திட்டம், சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் வரையிலான கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உட்பட பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

வருமான வரி சலுகையில் குளறுபடிகள் உள்ளன. ரூ.5 லட்சம் வரை முழு வரி இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கடந்த ரூ.89 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.62 ஆயிரம் கோடிதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 சதவீத நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. இத்திட்டத்தால் கிராமப்புற பெண்களுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. நிதி குறைக்கப்பட்டுள்ளதால் 22 சதவீத அளவுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

குட்காவுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். குட்கா பழக்கம் அதிகரித்தால், இளைய சமுதாயம் சீரழியும். புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். குட்காவை தடை செய்வது அவசரமானது, அவசியமானதாகும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது, யாருக்கும் ஆதரவு இல்லை என எங்களது நிலைபாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டோம். இடைத்தேர்தல் தேவையில்லாதது. நீர் மேலாண்மை, விவசாயம் என மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு நேரத்தை செலவிடுகிறோம். மற்ற கட்சிகள், இடைத்தேர்தலுக்கு சுற்றி வருகின்றனர். அமைச்சர்கள் சுற்றி வர போகிறார்கள். தமிழகத்தின் நிர்வாகம் ஒரு மாதத்துக்கு ஸ்தம்பிக்க போகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அண்ணா சதுக்கம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் விருப்பப்பட்டார். அதனால்தான், மெரினா கடற்கரையில் எதையும் செயல்படுத்தக் கூடாது என்ற பாமக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றோம். அதன் பிறகுதான், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடல் என்பதில் சுற்றுச்சூழல் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன. எனவே, கருணாநிதி நினைவிடத்தில் பேனாவை வைக்கலாம் என்பது எங்களது கோரிக்கையாகும். கடலில் பேனா வைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கும். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். பல சின்னங்கள் வைக்கப்பட்டு கடல் நாசப்படுத்தப்படும். கடலில் பேனா வைப்பது என்பது முன் உதாரணமாக இருக்கக் கூடாது, என்றார்.

Updated On: 2 Feb 2023 9:57 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு