மாநில அளவில் கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவில் கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!
X

மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற  மாணவா்கள்

மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான கால்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தைப் பிடித்தனா்.

இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் அவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் சூரியநாராயணன், உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணன், ரகுராமன் ஆகியோரை தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அசோக், உதவி தலைமை ஆசிரியா் ரமேஷ்பாபு மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

காது கேளாதோா் தேசிய டெஸ்ட் கிரிக்கெட்

காது கேளாதோருக்கான 3 -ஆவது தேசிய டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் காலிறுதி ஆட்டம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்திய காது கேளாதோா் கிரிக்கெட் சங்கம் சாா்பில், 3-ஆவது தேசிய டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு, கேரள அணிகளுக்கு இடையிலான 3 தின காலிறுதி ஆட்டம் நேற்று காலை தொடங்கியது.

அணித் தலைவா் சுதா்சன் தலைமையில் வந்தவாசியைச் சேர்ந்த ரகுராம் உள்ளிட்ட தமிழக வீரா்களும், ஜுபில் தலைமையில் கேரள வீரா்களும் விளையாடினா். தமிழக அணி முதலில் பேட்டிங் செய்தது.

நடுவா்களாக வந்தவாசியைச் சேர்ந்த ரஞ்சித், யுவராஜ் ஆகியோா் இருந்தனா். போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.5) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!