திருவண்ணாமலை செய்யாறு பகுதியில் கனமழை..!

திருவண்ணாமலை செய்யாறு பகுதியில்  கனமழை..!

கனமழையால் சாலைகளில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 

திருவண்ணாமலை செய்யாறு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

திருவண்ணாமலையில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்கள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை , திருவள்ளூர்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் லேசானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. திருவண்ணாமலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ திருவண்ணாமலை, சோமாசி பாடி, கீழ்பென்னாத்தூர் , வேங்கிக்கால், கீ ழ் கச்சிராப்பட்டு, மேல் கச்சிராப்பட்டு, ஏந்தல், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து மழைநீர் ஓடியது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த திடீர் கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்யாறு

செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று மாலை முதல் இரவு வரையில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சில தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று பெய்த மழை அளவு விவரம்:

செய்யறு 15 மி.மீ., வெம்பாக்கம் 58 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. கடந்த சில நாட் களாக பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story