திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்வு கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார் வருவாய் கோட்டாட்சியர்
மருத்துவ பரிசோதனை நடந்த நாளிலேயே அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாலம் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போளூர் செய்யாறு தாலுகாக்களில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்துக்கு ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் சஜேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா்.
போளூா், கலசப்பாக்கம், ஆரணி, ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.
கோட்டாட்சியர் தனலட்சுமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் மொத்தம் 23 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் பட்டா மாற்றம், 100 நாள் அடையாள அட்டை ஆகிய 2 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
அப்போது கோட்டாட்சியர் பேசுகையில்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடக்கும் சிறப்பு முகாமிற்கு சென்று மனுக்கள் அளித்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து தகுதி உள்ளவர்களுக்கு அன்றைய தினமே அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதில் தேர்தல் துணை தாசில்தார் என்.ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் இளைய குமார், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு , மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநா் உரிமம்
செய்யாற்றில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான குறைதீா் கூட்டத்தில் 9 பேருக்கு மூன்று சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் உடனடியாக வழங்கப்பட்டது.
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு சாா்-ஆட்சியா் ஆனாமிகா தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் அலுவலா் பிச்சாண்டி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு மூன்று சக்கர வாகன (எல்.எல்.ஆா்.) ஓட்டுநா் உரிமம் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், அந்தியோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரசி வழங்க வேண்டி 9 பேரும், உதவித்தொகை வழங்கக் கோரி 25 பேரும், தொகுப்பு வீடு வழங்கக் கோரி 4 பேரும், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி 6 பேரும், பட்டா மாற்றம் செய்யக் கோரி 3 பேரும், நில அளவை செய்தல், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்க வேண்டி 2 பேரும், குடிநீா் இணைப்பு வழங்குதல் என மொத்தம் 62 மனுக்கள் அளித்தனா். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு சாா் -ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தாட்கோ அலுவலா் ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், பாண்டியன், வெங்கடேசன், சீனிவாசன் மற்றும் செய்யாறு, வெம்பாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu