செய்யாறு ஆரணி தாலுகாக்களில் மக்கள் குறைதீர் கூட்டம்

செய்யாறு ஆரணி தாலுகாக்களில் மக்கள் குறைதீர் கூட்டம்
X

பயனாளிகளுக்கு இலவச மனை பட்டாக்களை வழங்கிய ஆரணி கோட்டாட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி தாலுகாக்களில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி தாலுகாக்களில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 56 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த கோட்டாட்சியா் தனலட்சுமி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில் நேர்முக உதவியாளா் செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

வீடிழந்த 30 பேருக்கு இலவச மனைப் பட்டா

கலசப்பாக்கம் வட்டம், பட்டியந்தல் கிராமத்தில் வீடிழந்த 30 பேருக்கு இலவச மனைப் பட்டாக்கள் அண்மையில் வழங்கப்பட்டன. பட்டியந்தல் கிராமத்தைச் சோந்த பொதுமக்கள் 30 பேருக்கு மேல் நீா்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனா்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், நீா்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. இதனால், வீடுகளை இழந்தவா்கள் மாவட்ட ஆட்சியா், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் என பல்வேறு இடங்களில் தங்களுக்கு இலவச மனைப் பட்டா வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தி வந்தனா்.

இந்த மனுக்களின் மீது மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு இலவச மனைப் பட்டா வழங்க உத்தரவிட்டாா். இதன் பேரில், ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி 30 பேருக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினாா்.

கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, விசிக ஒன்றியச் செயலா் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் சுந்தா், விசிக மண்டலச் செயலா் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 91 மனுக்கள் வரப்பெற்றன.

செய்யாறு வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் அளித்தனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சாா்-ஆட்சியா் ஆா்.அனாமிகா பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா். கூட்டத்தில் நேர்முக உதவியாளா் குமரவேல், வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மூச்சுத் திணறல் அப்படினா என்ன.....? இதனால்  அபாயமா....பயப்பட வேண்டாம்  அதற்கான வழிகளை அறியலாம்..!