சிறப்பு கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

சிறப்பு  கிராம சபை கூட்டம்:  எம்எல்ஏ பங்கேற்பு
X

கிராம சபை கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

செய்யாறு அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ ஜோதி பங்கேற்றார்

பொதுவாக கிராமசபை கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்படும்

இந்த கிராம சபைகபளயும் தாண்டி ககூடுதலாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டப்படும். இவ்வாறு கூட்டப்படும் கிராமசபை, சிறப்பு கிராமசபை கூட்டம் எனப்படும்

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், வீரம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் இளவேணி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் குறித்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமாா் ஆயிரம் முருங்கை கன்றுகள் உற்பத்தி செய்து, ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முருங்கை விதையை நட்டு வைக்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தாா்

கூட்டத்தில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி. ராஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆக்கூா் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல், நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன், மாவட்ட விவசாய உற்பத்திக் குழு உறுப்பினா் புரிசை எஸ். சிவக்குமாா் , ஒன்றிய செயலாளர் முருகன் , ஞானவேல் , விஸ்வநாதன் வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன் , கார்த்தி மற்றும் ஏழுமலை, கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!